தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் இறுதியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். மேலும் கூட்டணி குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தப்படுகிறது. அதிமுகவினரும், திமுகவினருக்கு ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்து முதல்வருடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் பிப்ரவரி 28ஆம் தேதி தமிழகம் வருகிறார். விழுப்புரத்தில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதற்காக தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வர் பழனிசாமியை அமித்ஷா சந்தித்துப் பேசலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.