திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா தாக்குதல் உலகையே திக்கு முக்காட செய்து உள்ள நிலையில் அந்த கொடிய வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் 911ஆக உயர்ந்துள்ளது. நேற்று உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தலைமைச்செயலர் சண்முகம் தகவல் அளித்திருந்தார்.
அதேபோல தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 44 பேர் குணமடைந்திருந்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சென்னையில் பிரபல வணிக வளாகமான வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த 27 வயதான ஆனந்தன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 28 நாட்களாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 28 நாட்கள் சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். இன்று மட்டும் 80 வயது பெண் உட்பட 4 பேர் குணமடைந்ததால், மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் தற்போது வரை 48 பேர் குணமடைந்துள்ளனர்.