பிரபல நடிகர் மாஸ்டர் மகேந்திரன் சினிமாவில் தான் 28 ஆண்டுகளை நிறைவு செய்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான நாட்டாமை திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் தனது முதல் படத்திலேயே பலரது மனதில் இடம்பிடித்தார். இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மாஸ்டர் மகேந்திரன் ‘விழா’ என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் மாஸ்டர் மகேந்திரன் விஜய் சேதுபதியின் இளவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து மாஸ்டர் மகேந்திரனுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தான் சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த மகிழ்ச்சி செய்தியை தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
So much love ❤️ https://t.co/OaoLwP40Ew
— Master Mahendran 🔱 (@Actor_Mahendran) May 9, 2021