கோவையில் கொரோனா பாதித்த 280 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிறந்து 3 நாள் ஆன குழந்தை முதல் 84 வயது நபர் வரை அனைவரும் குணமடைந்துள்ளனர். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தருவதற்கான வசதி உள்ளது.
கொரோனா வைரஸ் தன்மை மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதில், 20% நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சுவாச பிரசச்னை, கடுமையான உடல் வலி மட்டும் கடுமையான காய்ச்சல் உள்ளது. 80% பேருக்கு நோய் அறிகுறிகள் ஏதும் இல்லை என தெரிவித்தார். தற்போது கொரோனா வீரியம் சற்று அதிகமாகி உள்ளது என தெரிவித்தார்.
தமிழகத்தில் குழந்தைகள் யாரும் கொரோனா தோற்றால் உயிரிழக்கவில்லை. கொரோனவால் பாதித்த 60 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மொத்த ஆண்கள் பாதிப்பு 70%, பெண்கள் பாதிப்பு 30% ஆகும். மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனைப்படி ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.