ஜம்முவில் தொடர்ந்து இராணுவம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில் அம்மாநில முன்னாள் முதலவர் அனைவரும் மத்திய அரசு ஜம்முவில் என்ன செய்ய போகின்றது என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் பல்வேறு வதந்திகளும் எழுந்து வருகின்றது. காஸ்ஷ்மீர் சிறப்பு சட்டத்தை இரத்து செய்ய போவதாகவும் , காஷ்மீரை 3 மாநிலமாக பிரிக்க போவதாகவும் பல்வேறு செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றது.இதனால் யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம் என்று காஷ்மீர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் தீவிரவாதிகள் அதிகமாக ஊடுருவும் பணிக் காலம் தொடங்க இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் இருக்கும் சூழலில் அதை தடுப்பதற்காகவும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படடாலும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவதும் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த என்.ஐ.ஏ மற்றும் உபா சட்டத்தின் மூலம் ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகளும் , தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடியவர்களை ஒரே நாளில் மொத்தமாக கைது செய்யப்படலாம் என்ற தகவலும் எழுந்துள்ளது.காஷ்மீரில் மத்திய அரசு இப்படி கைது நடவடிக்கையில் ஈடுபட்டால் அங்கு பெரிய அளவில் வன்முறை ஏற்படும்.
எனவே இந்த வன்முறை தடுப்பதற்கு அனைத்தையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர ராணுவ குவிப்பு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி வருகின்றது. என்ன இருந்தாலும் பல்வேறு யூகத்தின் அடிப்படையில் எழும் அனைத்து சந்தேகத்திற்கும் வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இது தொடர்பான எழும் விவாதங்களில் ஜம்மு குறித்த முழு விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.