ஹரியானா மாநிலத்தில் போலீசார் பறிமுதல் செய்து குடோனில் வைத்திருந்த 29 ஆயிரம் மதுபானங்களை எலி குடித்துவிட்டதாக அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்து தங்கள் வசம் வைத்திருந்தனர். வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்போது அது ஒப்படைக்கப்படும். இந்நிலையில் நிலுவையில் உள்ள 825 வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட 50 ஆயிரம் லிட்டர் நாட்டு சாராயம், 30 ஆயிரம் லிட்டர் ஒயின், 3000 பீர் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஸ்டோர் ரூமில் வைத்திருந்தனர்.
தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில் மதுபானங்கள் வைக்கப்பட்டிருந்த 30 காவல் நிலையங்களில் 25 காவல் நிலையத்தில் 29 ஆயிரம் லிட்டர் மது பானங்கள் மாயமாகி விட்டதாகவும், இதனையடுத்து எலி குடித்திருக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் பதிலளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.