Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“29 நிமிடத்தில் 108 யோகாசனம்” உலக சாதனை படைத்த 12 வயது சிறுவன்…. குவியும் பாராட்டு…!!

13 வயது சிறுவன் யோகாசனத்தில் சாதனை படைத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் சிவசக்தி நகர் பகுதியில் ஹேமா-அருள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சக்திவேல் (13) என்ற மகன் இருக்கிறார். இவர் சிதம்பரம் காமராஜ் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் சிறுவயதிலிருந்தே யோகாசனம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். இதனால் சிறுவன் யோகாசனத்தில் உலக சாதனை படைக்க வேண்டும் என எண்ணியுள்ளார். இந்நிலையில் சிதம்பரத்தில் வெர்ட்ஜ்‌ புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சக்திவேல் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 29 நிமிடங்களில் 108 வகையான யோகாசனங்களை சிறுவன் செய்தார். இதனால் சிறுவன் உலக சாதனை படைத்ததாக வெர்ட்ஜ் புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்டு இயக்குனர் சுரேஷ் மற்றும் இணை இயக்குனர் சந்தோஷ் ஆகியோர் அறிவித்தனர். மேலும் சிறுவனை காமராஜ் பள்ளி தாளாளர் கஸ்தூரி, முதல்வர் சக்தி, யோகா ஆசிரியர் தெய்வானை, சர்வமங்கள அகாடமி நிறுவனர் பாலாஜி ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Categories

Tech |