நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
எதிலும் போராடி வெற்றி பெறக்கூடிய மேஷ ராசி அன்பர்களே..!! இன்று புண்ணிய தல பயணங்களால் நன்மை ஏற்படும் நாளாக இருக்கும். ஆதாயம் இல்லாமல் எந்த காரியத்திலும் இறங்க மாட்டீர்கள். பிறரை கட்டளை இடுகின்ற அரசு உயர்பதவிகள் கிடைக்கக்கூடும். இன்று உங்களது ஆலோசனை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றியும் அடைவார்கள். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டிகள் விலகிச்செல்லும். தடைபட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பீர்கள். செலவுகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். உடன் பணிபுரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்கக் கூடும். இன்று வெளியூர் பயணத்தில் மட்டும் கவனமாக இருங்கள்.
பொருட்கள் மீதும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் யாரிடமும் எந்த விதமான கடன்கள் வாங்காதீர்கள். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முயற்சியின் பேரிலே சிறப்பை பெறமுடியும். சக மாணவருடன் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு நீல நிறம் அதிர்ஷ்ட நிறம் என்பதால் நீல நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை வைத்து கொள்ளுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துமே நல்லபடியாக நடக்கும். தயவுசெய்து இதை மட்டுமே செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்
ரிஷபம் :
சக மனிதர்களை அன்பாக மதிக்கக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று கோவில் குல பணிகளில் ஈடுபடுவீர்கள். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலா பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். புகழ் ஓங்கும். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை விலகி செல்லும். எதிர்பார்ப்புகள் உங்களுக்கு சற்று பூர்த்தியாகும் நாளாகவும் இருக்கும். பணவரவு கூடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். சக தோழர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரவு நல்லபடியாக இருப்பதால் சேமிக்கக் கூடிய மனப்பான்மையை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று உங்கள் செயல் திறமை அதிகரிக்கும். வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நன்மை கொடுக்கும்.
மனதில் இருந்த கவலைகள் நீங்கி தைரியம் உண்டாகும். வீடு, மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். சக மாணவரிடம் மட்டும் கொஞ்சம் பொறுமையைக் கையாளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான காரியங்களுக்கு செல்லும்போதோ முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
மிதுனம் :
கம்பீரமான தோற்றம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே..!! இன்று பல வழிகளிலும் உங்களுக்கு பணவரவு ஏற்படும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். புதிய இனிய காதல் உறவு ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். இன்று வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தாமதமாகி வந்த சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரவு கூடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
எண்ணிய காரியங்கள் கைகூடும். நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். சக மாணவர்களிடம் மட்டும் ஒற்றுமையை பேணுவது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
கடகம் :
சட்டென்று காதலில் பயப்படக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று மனைவி மகளுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரியிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும். இன்று பணமுடை கொஞ்சம் ஏற்படக்கூடும். அதனால் கடன் வாங்க நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாக எதையும் கையாளுங்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கப் பெறுவீர்கள். நிலுவையிலுள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரிய தடை அகலும். ஆனால் இன்று பணத்தட்டுப்பாடு மட்டும் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றார் போல் பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சிறப்பாகவே நடைபெறும்.
இன்று எந்திரங்கள் மற்றும் தீ ஆகியவற்றைக் கையாளும் பொழுது கவனமாக கையாளுங்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் காவி நிறம்
சிம்மம் :
அதிகாரப் பதவியும் தலைமை பண்பும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் கௌரவக் குறைவு ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை வேண்டும். பயணத்தில் தடங்கல்கள் கொஞ்சம் ஏற்படலாம். இன்று தேவையான நிதி உதவி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். பணி சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். மேலிடத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு நல்லபடியாகவே இருக்கும். அடுத்தவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக செய்வது நன்மை கொடுக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
தயவு செய்து ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். முக்கியமாக படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். அது போதும் சக மாணவரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். கூடுமானவரை நீங்கள் கலகலப்பாக காணப்படுவீர்கள். நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
கன்னி :
நேர்மையான குணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!! இன்று தனவரவு அதிகரிக்கும். எதிரிகள் அடிபணிவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணத்தில் சுகம் ஏற்படும். தனக்கென தனி வீடு அமையக் கூடிய சூழல் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி செல்லும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரின் அன்பு உங்களுக்கு கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை
துலாம் :
மிகத் தெளிவான சிந்தனை குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தனலாபம் பெருகும் . சகோதரர்களால் நன்மை ஏற்படும். அதன் காரணமாக மன தெம்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியும் பெருகும். எல்லாவகையிலும் சுகமும் நிம்மதியும் கூடும். இன்று எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லாம் நம்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பலம் பெறும். உங்களுடைய வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாகவே செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பிள்ளைகளுடன் மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள்.
குடும்பத்தாருடன் கலகலப்பாக காணப்படுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது மட்டும் சிறப்பை கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
விருச்சிகம் :
தானம் தர்மத்தில் கொடை வள்ளலாக திகழக்கூடிய விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். வாகன யோகம் ஏற்படும். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையைக் கேட்டு நடந்து கொள்வது உங்களுடைய மனதிற்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினரின் வருகையும் இருக்கும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து மோதல்கள் விலகிச் செல்லும். இன்று சொத்துக்கள் கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
பழைய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகளும் இருக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் நடக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இருந்தாலும் படித்த படத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அந்த காரியம் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்
தனுசு :
தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக் கூடிய தனுசுராசி அன்பர்களே.!! இன்று பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். செலவை குறைக்க தேவையற்ற பொருட்களை வாங்குவதை தவிருங்கள். இன்று குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரிடும். மனதை மட்டும் இன்று கட்டுபடுத்தி விடுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும்.. வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவதால் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கி நெருக்கம் ஏற்படும்.
இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் கடுமையாக உழையுங்கள் விளையாட்டு ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். நல்ல முன்னேற்றகரமான சூழல் இருக்கும். தயவுசெய்து இதை செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்
மகரம் :
பொது நலக் காரியங்களில் அதிக அளவு ஈடுபாடு கொண்ட மகர ராசி அன்பர்களே..!! இன்று தனவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிறருக்கு உதவி செய்வீர்கள். பெண்களால் லாபம் ஏற்படும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து மகிழ்வீர்கள். இன்று எதிர்பார்த்த செல்வ சேர்க்கை உண்டாகும். மனதில் கவலை கொஞ்சம் ஏற்படலாம். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயத்தை நினைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எல்லோரையும் எளிதில் வசிகரிக்கும் திறமை இன்று அதிகரிக்கும். செல்வம் பலவழிகளில் வந்து சேரும்.
உங்களுடைய வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகிச் செல்வார்கள். முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஆதரவு இருக்கும். அன்பு இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இன்று இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது, முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுது காவி நிறத்தில் ஆடை அல்லது காவி நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் மஞ்சள் நிறம்
கும்பம் :
பொறுமையின் சிகரமாக திகழக்கூடிய கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று முன்கோபத்தால் வீட்டில் குழப்பங்கள் கொஞ்சம் ஏற்படலாம். மனைவின் கழகத்தால் உறவுகளுக்குள் பகை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரியிடம் பணிவாக நடந்தால் அவர்களின் ஆதரவு இருக்கும். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாகவே நடந்து முடியும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளைச் செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும் . மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதால் செலவு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள்.
மற்றவர்களிடம் பேசும்போது கொஞ்சம் பொறுமையாகவே பேசுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக பாடத்தில் கவனம் செலுத்துங்கள். இன்று விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் சிறப்பு. சக மாணவர்களுடன் பழகும் பொழுது கொஞ்சம் கவனமாகவே பழகுங்கள். நீங்கள் பேசும்போது கொஞ்சம் பொறுமையாக பேசுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுதோ கருநீலத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்டநிறம் : கருநீலம் மற்றும் மயில் நீல நிறம்
மீனம் :
மற்றவர்கள் வியக்கும்படி காரியங்களை சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெற கூடிய மீனம் ராசி அன்பர்களே..!! இன்று தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனத்தை செலுத்துங்கள். தடைபெறும் காரியங்களை கண்டு தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். வாகன சுகம் குறையும். துணிவுடன் செயலில் இறங்குவீர்கள். இன்று தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். செலவுகள் மட்டும் அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இல்லை எனில் பலரையும் விரோதித்துக் கொள்ளக் கூடிய சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கக்கூடும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். வெளியூர் பயணத்தின் போது உடமைகள் மீது கவனம் இருக்கட்டும். புதிய முயற்சிகளில் ஓரளவு லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு கல்வியில் ஆர்வம் செலுத்தினால் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற் கொள்ளும் பொழுதோ அல்லது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்