அமெரிக்காவில் இதுவரை 29.4 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா இருந்து வருகின்றது. கொரோனாவால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிர் இழப்புகளையும் அமெரிக்கா அதிக அளவில் சந்தித்துள்ளது. தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியதால், அமெரிக்கா அதிலிருந்து மீண்டு வந்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவில் மாடர்னா, பைசர் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இதுவரை மொத்தம் 29.4 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், 13.50 கோடி பேர் 2 டேஸ்களையும் செலுத்தி கொண்டதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.