பிரிட்டனில் ஒரு சிறுமியை சுமார் 7 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 29 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரிட்டனில் சிறுவர்கள் தொடர்பான பழைய பாலியல் வழக்குகளை கண்டுபிடித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான பாலியல் வழக்குகள் வெளிவந்துள்ளன. இதில் அதிர வைக்கும் வகையில் ஒரு வழக்கில் சுமார் 29 குற்றவாளிகள் உள்ளனர். அதாவது இங்கிலாந்தில் இருக்கும் மேற்கு யார்ஷயரில், கடந்த 2003 ஆம் வருடத்திலிருந்து 2010ற்குள் ஒரு சிறுமியை சுமார் 29 நபர்கள் சேர்ந்து ஏழு வருடமாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளனர்.
இந்த 29 பேரும் வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி மற்றும் 9 தேதியில் பிராட்போர்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்கள். தற்போது காவல்துறையினர் 29 குற்றவாளிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கின்றனர். அவர்கள் சுமார் 35 லிருந்து 64 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.