Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 29 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 130 பேர்: முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்றைய நிலவரப்படி, கேரளாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 21 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்றும் 7 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் ஒருவருக்கு மட்டும் தொடர்புகள் மூலம் பரவியதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 630 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் 130 பேர் உள்ளதாக முதல்வர் பினாரயி விஜயன் தெரிவித்துள்ளார். இங்கு பாதிக்கப்பட்டவர்களில் 496 பேர் குணமடைந்த நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கேரளாவில் முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் செய்லபடலாம் என தெரிவித்துள்ளார். சுழற்சி முறையில் 50% கடைகளுடன் மாநிலத்தில் வர்த்தக வளாகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |