அரசின் தவறுகளும் மறைக்கப்படும் மரணங்களும் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
தன் நிர்வாக தவறுகளால் லட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடி கொண்டி ருக்கிறது அதிமுக அரசு. ஏப்ரலில் வெளியான அரசாணை எண் 196-ன் படி மரணங்களின் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக 38 மாவட்ட கமிட்டிகளும், ஒரு மாநில அளவிலான கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏழு வாரங்கள் கடந்தும் ஜூலை 11 இல் அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கை பற்றி ஏன் பொதுமக்களுக்கு அறிவிக்கவில்லை ? சென்னையிலேயே 63 சதவீத மரணங்கள் மறைத்து மோசடி நடக்கிறது என்றால் நிர்வாக கட்டமைப்பு வசதிகள் இல்லாத மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கும் ?
மதுரையில் மயானங்கள் 24 மணி நேரமும் இயங்குகின்றன என்கின்ற செய்தி ஜூலை 10-இல் ஊடக கட்டுரையில் வெளியானது. ஜூலை 15 இல் வெளியான ஊடகச் செய்தி அடிப்படையில் மேலும் 290 மரணங்கள் அரசின் அறிக்கையில் சேர்க்க வேண்டியுள்ளது. இதுநாள் வரையிலும் மறைக்கப்பட்ட மரணங்கள் குறைந்தது 63% என கணக்கில் எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் மரண விகிதம் என்பது 3.66, சென்னையில் மட்டும் 4.47% . ஜூலை 22 அன்று மரணங்கயில் தவறுகள் நேராமல் இருப்பதற்காக மாநில அளவிலான கமிட்டி அமைப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 39 கமிட்டிகள் அமைத்து இந்த எடப்பாடி பழனிச்சாமி ஏன் புதிய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும்.
சென்னையிலேயே 63% மரணங்களை மறைத்து மோசடி என்றால் கட்டமைப்பு வசதிகளற்ற மாவட்டங்களில் மறைக்கப்பட்ட மரணங்கள் எத்தனை?
மரணங்களின் தணிக்கைக்காக 39 கமிட்டிகளை அமைக்க ஏப்ரல் 20ல் அரசாணை வெளியிட்டு இப்பொழுது மீண்டும் கமிட்டிக்கான அறிவிப்பு ஏன்?
எவ்வளவு குளறுபடிகளைத்தான் தமிழகம் தாங்கும்? pic.twitter.com/FI8sBuGUi2
— M.K.Stalin (@mkstalin) July 26, 2020
ஜூலை 24 அன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை துறையின் செயலாளர் இனி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட குறைந்த அளவிலான மரண எண்ணிக்கை கொண்ட அறிக்கைக்கு முரணாக மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எண்ணிக்கை வெளியிடக் கூடாது என்பதற்கான மறைமுக எச்சரிக்கை தான் இந்த கடிதமா ? என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்