Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ஒரே நாளில் 290 மரணம்… ”சீனாவை மிஞ்சிய உயிரிழப்பு” அடங்கிய அமெரிக்கா ..!!

கொரோனா நோய் தொற்றால் அமெரிக்காவில் சீனாவை விட அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 828,137 பேர் பாதித்துள்ளனர். 174,440  பேர் குணமடைந்த நிலையில் 40,728 பேர் உயிரிழந்துள்ளனர். 612,969 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 30,910 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

Coronavirus: A problem unlike anything else Trump has faced - BBC News

கொரோனா வைரசால் தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 290 பேரை இழந்து தவிக்கும் அமெரிக்கா கொரோனாவின் தீவிரத்தால் அடங்கி போயுள்ளது. அமெரிக்காவில் கொரோனா  தொற்று  176,518 பேருக்கு உறுதி செய்த நிலையில் 3,431 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 6,241 குணமடைந்த நிலையில் 166,846 சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3,893 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது. அமெரிக்காவின் உயிரிழப்பு எண்ணிக்கை சீனாவை மிஞ்சியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |