Categories
உலக செய்திகள்

BREAKING : இந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா பாதிப்பு ….!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,902ஆக உயர்ந்துள்ளது நாட்டு மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.

Coronavirus update: Death toll in India rises to 4 as 72-year-old ...

தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உலகளவில் மக்கள் அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றார்கள். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,099,080 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 59,179 பேர் உயிரிழந்துள்ளனர். 228,938 பேர் குணமடைந்த நிலையில் 810,963 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 39,391 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Coronavirus outbreak: China shutdowns hit Indian electronics ...

இந்நிலையில் இந்தியாவில் 2,547ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 2902ஆக அதிகரித்துள்ளது. அதே போல பலியானோர் எண்ணிக்கை 62ஆக இருந்தநிலையில் தற்போது 68ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களை பொறுத்தவரை 163இல் இருந்த எண்ணிக்கை 184ஆக  அதிகரித்துள்ளது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது.

No community transmission of COVID-19 yet. Here's what stage 3 ...

இந்தியாவை பொறுத்தவரை அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 423 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 411 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Categories

Tech |