Categories
கடலூர் தற்கொலை மாவட்ட செய்திகள்

2குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை… தாய் தற்கொலை… தந்தை மாயம்…!!!

கடலூர் மாவட்டத்தில் தான் பெற்ற 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி தாலுகா வெங்கடாம்பேட்டை பகுதிக்கு அடுத்த உள்ள வேகாக்கொல்லை பிள்ளைபாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் என்பவர். அவருக்கு <34 வயது> ஆகிறது. பொக்லைன் வாகனத்தின் ஓட்டுனராக இருந்துள்ளார். இவருக்கு சுதா என்னும் (30 வயது) உடைய மனைவியும் திலோக்நாத் (வயது4) எனும் மகனும், ஐஸ்வர்யா (வயது 3) என்ற மகளும் இருந்துள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப சூழ்நிலை காரணமாக சில பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன.

இந்நிலையில் நேற்றும் இருவருக்கிடையில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதனால் சுதா மிகவும் கவலையுடன் இருந்தார். சிறிது நேரம் கழித்து சுதாவின் மாமனாரான சண்முகம் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார். உள்ளே வந்து பார்த்த பொழுது தன் பேரக் குழந்தைகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் நெய்வேலி உதவி போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா, வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா , மற்றும் சில போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் அச்சம்பவம் குறித்து விசாரித்தனர். தன் கணவருடன் அடிக்கடி ஏற்படும் தகராறு காரணமாகவே தன் இரண்டு குழந்தைகளையும் தன் ஜாக்கெட்டால் கழுத்தை நெறித்து சுதா கொன்று, பின்பு தானும் தன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இவர்கள் மூன்று பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். சுதாவின் கணவரான ஐயப்பன் நேற்றிலிருந்து வீட்டில் இல்லை. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இது  குறித்து உளுந்தூர் பேட்டைக்கு அருகிலுள்ள ஒடப்பன்குப்பத்தைச் சேர்ந்த சுதாவின் தந்தை சுப்ரமணியன் போலீஸில் தன் பேரக் குழந்தைகள் மற்றும் மகளின் உடல்களில் காயங்கள் இருப்பதால் அவர்களது இறப்பில் எனக்கு சந்தேகம் இருக்கிறது என புகார் அளித்துள்ளார். சுதாவிடம்  வரதட்சனை கேட்டு அவரது கணவர் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். சென்ற வாரம் கூட தன் தாய்  வீட்டிலிருந்து 3 பவுன் நகைகளை வாங்கி வந்துள்ளார். தற்சமயம் கணவன் மனைவிக்கு இடையில் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

ஆகவே இவர்களின் இறப்பில் எனக்கு சந்தேகம் இருக்கிறது என்று சுப்பிரமணியம் போலீசிடம் கூறினார்.சுப்பிரமணியத்தின் புகாரின் அடிப்படையில் சுதா தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் 2 குழந்தைகளின் வாழ்க்கை பறிபோனதை எண்ணி அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

Categories

Tech |