இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்ததால் நடிகர் பாலா கவலையில் இருக்கின்றார்.
தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து வருகின்றார் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. இவர் மலையாள பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் விவாகரத்தில் முடிந்தது. இதைத் தொடர்ந்து டாக்டர் எலிசபெத் உதயனை சென்ற 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அவரையும் பிரிந்து விட்டார். இந்த நிலையில் இதுகுறித்து பாலா கூறியுள்ளதாவது, ஒருமுறை திருமணம் தோல்வியடைந்தால் அதைப் பற்றி யோசிக்க மாட்டோம். ஆனால் இரண்டாவது முறையும் தோல்வி அடைந்தால் யோசிக்க ஆரம்பிப்போம். இது என் வாழ்க்கையில் மிகவும் வேதனையான நாட்கள் என கூறியுள்ளார். பின் அந்த வீடியோவை நீக்கி விட்டார். இந்த நிலையில் அவரின் இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது குறித்து தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.