2 – வது திருமணம் செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பகவான்பட்டி கிராமத்தில் முத்தழகன் – சுகன்யா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் முத்தழகனுக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது.
இதனையடுத்து அந்தப் பெண்ணை தனக்கு 2 – வது திருமணம் செய்து வைக்குமாறு முத்தழகன் தனது மனைவி சுகன்யாவிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுகன்யா தனது கணவரை கண்டித்துள்ளார். அதன்பிறகு முத்தழகன் தான் தகாத உறவு வைத்திருந்த அந்த பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து சுகன்யா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்துறையினர் முத்தழகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.