Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

2வதாக திருமணம் செய்த முதியவர்… மனைவி அடித்து கொலை… அச்சத்தில் தற்கொலை முயற்சி…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக 2வது மனைவியை அடித்து கொலை செய்த முதியவர் கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கோனூர் பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் கூலித்தொழிலாளியான ராஜூ (எ) வரதராஜ்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி இறந்து விட்ட நிலையில் மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு 2வதாக எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சம்பூர்ணம்(55) என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி வரதராஜ் ஆத்திரமடைந்து இரும்பு கம்பியை வைத்து சம்பூரணத்தின் தலை மற்றும் உடலில் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதற்கிடையே மனைவி இறந்துவிட்டால் கொலை வழக்கில் கைது செய்து விடுவார்கள் என அச்சத்தில் வரதராஜூம் கத்தியால் தன்னை தானே குத்தி கொண்டுள்ளார். மேலும் வரதராஜ் மயங்கியிருப்பதை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பரமத்திவேலூர் போலீசார் வரதராஜ் மீது வழக்குப்பதிவு செய்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனைதொடந்து சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பூரணத்திற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பூரணத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் வரதராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வரதராஜ் கத்தியால் குத்தியதால் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Categories

Tech |