Categories
கிரிக்கெட் விளையாட்டு

2வது வீரராக 5000 ரன்களை குவித்து விராட் கோலி சாதனை……!!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 5000 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

ஐ.பி.எல்லில் 7-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ராயல் சேலங்கர்ஸ் பெங்களூரு  அணிகள் விளையாடியது . இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு  தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 (33) ரன்களும் சூரியகுமார் யாதவ் 38 (24) ரன்களும், ஹர்திக் பாண்டியா 32 (14) ரன்களும், யுவராஜ் சிங் 23 (12) ரன்களும்,  டிகாக் 23 ரன்களும் குவித்தனர். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக சாஹல் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.  பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கடைசி வரை போராடிய டிவில்லியர்ஸ் 41 பந்துகளில் 70*  ரன்கள்   (6 சிக்ஸர், 4 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். விராட் கோலி 32 பந்துகளில் 46  ரன்களும்,  பார்த்திவ் பட்டேல் 22 பந்துகளில் 31 ரன்களும்  குவித்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும், மார்க்கண்டே 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு  5000 ரன்களை கடக்க 46 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட் கோலி 32 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் 5000 ரன்களை தொட்ட 2வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.இவர் இதுவரை 165 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 34 அரைசதங்களும், 4 சதங்களும் விளாசியுள்ளார். ஏற்கனேவே 5000 ரன்களை கடந்த முதல் வீரராக சென்னை அணியின் ரெய்னா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 3 வது  வீரராக ரோஹித் சர்மா 4555 ரன்களுடன் இருக்கிறார்.

 

 

 

Categories

Tech |