அதிமுகவினுடைய அலுவலகத்தில் ஜூலை மாதம் 11-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் வருகை தரும் பொழுது மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நுழைந்தது.
அப்பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது, கொள்ளையடிக்கப்பட்டது என பல்வேறு புகார்கள் அதிமுக – இபிஎஸ் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சிபிசிஐடி வசம் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில்தான் ஏற்கனவே அதிமுக அலுவலகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சிபிசிஐ போலீசார் நடந்து விசாரணை நடத்தி இருந்தார்கள். இதேபோல நேற்றைய தினத்தில் அதிமுகவின் அலுவலக மேலாளர் மகாலிங்கம் நேரடியாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார். இந்த தருவாயில் தற்போது இரண்டாவது முறையாக அதிமுக அலுவலகத்தில் நேரடியாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், என்னென்ன பொருட்கள் எல்லாம் காணாமல் போயிருக்கின்றது என்பதை அடிப்படையாக வைத்து கூடுதல் விவரங்களை சேகரிக்கப்பட இருக்கின்றது. தற்போது இந்த விசாரணை நடந்து கொண்டு இருக்கின்றது.