சாலமன் தீவுகள் நாட்டில் இரண்டாம் உலகப்போர்க்கால குண்டு வெடித்ததில் 2 நபர்கள் பரிதாபமாக பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் இருக்கும் சாலமன் தீவுகள் நாட்டில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட பல குண்டுகள் வெடிக்காமல் பூமியின் அடியில் புதைந்து கிடந்திருக்கிறது. இந்நிலையில் நாட்டின் தலைநகரான ஹோனியாராவில் வசிக்கும் ஒரு தம்பதியர் நேற்று அதிகாலை நேரத்தில் தங்கள் மகன்கள் இருவருடன் வீட்டின் வெளியில் அமர்ந்திருந்துள்ளனர்.
அந்த நேரத்தில், குளிர் காய்வதற்காக அவர்கள் அங்கு குழி தோண்டி, அதில் விறகுகளை போட்டு நெருப்பை பற்ற வைத்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென்று எதிர்பாராத விதமாக அதிகமான சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்திருக்கிறது. இதில் தந்தையும், ஒரு மகனும் பரிதாபமாக பலியாகினர்.
அவரின் மனைவியும், மற்றொரு மகனும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று ஆராய்ந்த போது, அவர்கள் நெருப்பு வைத்த இடத்தின் மண்ணுக்கடியில், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு புதைந்து இருந்ததும், நெருப்பு வைத்தவுடன் அது வெடித்து சிதறியதும் தெரியவந்துள்ளது.