பெரம்பலூர் மாவட்டத்தில் வயதான தம்பதியினர் அரளி விதையை அரைத்து தின்று தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தை அடுத்துள்ள தொட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். 60 வயதுடைய இவருக்கு 52 வயதுடைய சரோஜா எனும் மனைவி இருக்கிறார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சரோஜா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். சரோஜாவை கண்ணன் நன்கு கவனித்து கொண்டார்.
இவர்களுக்கு மாணிக்கராஜ் (38), கோவிந்தராஜ் (35)என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சரோஜா மற்றும் கண்ணன் தங்களை யாரும் கவனித்து கொள்ளாததால் மனமுடைந்து நேற்று மாலை அரளி விதையை அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயதான தம்பதியை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால் அவர்கள் அரளி விதையை அரைத்து தின்று தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
!!!