Categories
மாநில செய்திகள்

நல்லா கேட்டுக்கோங்க…. 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!

இன்று முழு ஊரடங்கை  முன்னிட்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை  நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஊரடங்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமையான நாளைய தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் முழு ஊரடங்கின் போது, மருந்து கடைகள், மருத்துவமனைகள் இயங்க அனுமதி அளிக்கப்படும் சூழ்நிலையில்,

இதனை காரணம் காட்டி, பலர் இருசக்கர வாகனங்களில் சுற்றுவதாக பல தொடர் புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் இன்றைய தினம் வீட்டின் அருகில் உள்ள பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே நடந்து சென்று வர வேண்டுமெனவும் வாகனங்களை பயன்படுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,   மருத்துவமனை ஊர்திகள், அமரர் ஊர்திகள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Categories

Tech |