Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3½ இலட்சம் இபாஸ் நிராகரிப்பு… இது தான் காரணமாம்..!! அதிகாரி தகவல்..!!

3½ லட்சம் விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத காரணத்தால் அதிகாரிகள் நிராகரித்ததாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது . இதில் உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும், இல்லையெனில் நிராகரிக்கப்படும் என்று  அரசு கூறியிருந்தது . இதுகுறித்து  கோவை மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் இ பாஸ் பெற உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று தெரிவித்தார்.

மற்ற மாவட்டங்களில் இருந்து கோவை வருவதற்காக  மருத்துவ அவசர தேவைக்கு 1 லட்சத்து 74 ஆயிரத்து 750 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கபட்டன. அதில் 44 ஆயிரத்து 672 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு இபாஸ் வழங்கப்பட்டது. அதில் 1 லட்சத்து 28 ஆயிரத்து  54 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன . திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 33,745 விண்ணப்பங்கள் வந்ததில் 9,891 விண்ணப்பங்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்டு 23 ஆயிரத்து 605 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.

வெளி மாவட்டத்தில் சிக்கிக்கொண்டு சொந்த மாவட்டமான கோவை வருவதற்கு 2 லட்சத்து 4 ஆயிரத்து 931 விண்ணப்பங்கள் வந்ததில் 45 ஆயிரத்து 612 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. கோவை வருவதற்கு கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஆன்லைன் மூலம் 4 லட்சத்து 98 ஆயிரத்து 818 விண்ணப்பங்கள் வந்திருந்தன, இதில் 3 லட்சத்து 54 ஆயிரம் 425 விண்ணபங்கள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

Categories

Tech |