Categories
மாநில செய்திகள்

3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலில் உருவாக்கியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒரு சில இடங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |