இந்தியா – நியூஸிலாந்து மோதும் 3ஆவது போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் 2 ஆட்டங்களில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுய் நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.
டி-20 தொடரில் நம்மை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணியை ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் செய்வோம் என்ற எண்ணத்துடன் நியூஸிலாந்து அணியும், கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றியை ருசித்து டெஸ்ட் போட்டிக்குத் தெம்பாக களமிறங்கும் முனைப்பில் இந்திய அணியும் என இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்து கட்டுவதால் இந்த ஒருநாள் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
New Zealand have won the toss and they will bowl first in the 3rd and final ODI.#NZvIND pic.twitter.com/A21ZjEkzKt
— BCCI (@BCCI) February 11, 2020