மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வேலூரில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேலூரில் மாற்றுத்திறனாளிகள் மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் முன்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கையாக கொரோனா நிவாரண நிதி உதவியாக மூன்றாயிரம் ரூபாய் தரக் கோரியும், மற்ற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது போல 3 அல்லது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி அவர்கள் வலியுறுத்தினார்கள்.
மேலும் அரசு வேலைவாய்ப்பில் 5 விழுக்காடு தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வரை காலவரையின்றி குடியேறும் போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதுமட்டும் இல்லாது பல மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.