திண்டுக்கல் மாவட்டத்தில் என்.பி.ஆர் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மதுரை தியாகராஜர் கல்லூரியில் தனியார் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கழிவு நீர் குழாய், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக 3டி பிரிண்ட் டெக்னாலஜி உதவியுடன் ரோபோட்டை வடிவமைத்து மாணவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த படைப்பு இரண்டாவது இடத்தை பிடித்ததால் மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து எந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவர்களான இமான் முகமது, கௌதமன், ராகேஷ், சரவணகுமார் ஆகியோரை கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
Categories