Categories
அரசியல் மாநில செய்திகள்

3மாதங்களில் மட்டும்…. ரூ.40,000,00,00,000 …. கஜானா காலி ஆகிட்டு…. அரசை வரிந்து கட்டிய உப்பிக்கள் …!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக செய்தியாளர்களை சந்தித்தது. எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தலுக்கு முன்பு பணிகளை முடிக்க முடியாது என்று தெரிந்தும் தனது கடந்த 3 மாதங்களில் மட்டும் 40,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள திட்டங்களுக்கு அரசு கஜானாவை காலி செய்து இருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சி 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள்.

தமிழக நிதி மேலாண்மை வரலாற்றில் முதல்வரும், துணை முதல்வரும் அதிமுக ஆட்சியில் அழிக்கமுடியாத கரும்புள்ளிகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்த ஆட்சியை கொடுத்துவிட்டு கடைசி நிதிநிலை அறிக்கை யை தாக்கல் செய்துள்ளார்கள். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், நிதி மேலாண்மையில் ஏற்பட்டுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் நிதி நிலைமை தமிழக மக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில் வேகமாக சீரமைக்கப்படும.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் 152 தொகுதிகளில் உள்ள மக்கள்   தலைவரை சந்தித்து மனு அளித்து இருக்கின்றார்கள். இந்த நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்பதற்கு உதாரணம் தான் தலைவரிடம் பெறப்பட்ட மனுக்கள். புதுவையில் நடந்த அரசியல் படுகொலையானது ஜனநாயகத்தை எந்த வகையிலும் பாஜக படு கொலை செய்யும் என்பதற்கு உதாரணம் ஆகும் எனதெரிவித்தார்.

Categories

Tech |