Categories
தேசிய செய்திகள்

3ம் உலகப்போர் தொடங்கியது…. ரஷ்ய அரசு ஊடகம் எச்சரிக்கை….!!!!

உக்ரேன் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலின் பொழுது ரஷ்யாவின் அதிநவீன போர்க்கப்பல் மாக்ஸ்வா தகர்க்கப்பட்டது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று 51-வது நாளாக ரஷ்யா உக்ரைன் இடையே போர் நீடித்தது. ரஷ்ய கடற்படையை சேர்ந்த அதிநவீன மாக்ஸ்வா போர்க்கப்பலை உக்ரைன் தகர்த்தியது. இந்த போர்க்கப்பலில் எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளும் இருந்தது. இந்தப் போர்க் கப்பலில் இருந்த 510 பேரில் 452 பேர் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் ஊடகம் தெரிவித்தது.

இதுகுறித்து ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மர்ம ஏவுகணை தாக்குதலில் மாக்ஸ்வா போர்க்கப்பலை சேதம் அடைந்தது. இந்த கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா இராணுவம் உக்ரைன் மீது நேற்று தீவிர ஏவுகணை தாக்குதல் நடத்தியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவின் முக்கிய போர்க்கப்பலில் ஒன்றான மாக்ஸ்வா போர்க்கப்பல் தாக்கப்பட்டதன் மூலம் முழு அளவில் மூன்றாம் உலகப்போரை ஏற்கனவே தொடங்கி விட்டது என ரஷ்ய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ரஷ்யா தற்போது நோட்டோ படைக்கு எதிராக போராடுவதாகவும், மாக்ஸ்வா போர்க்கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது ரஷ்ய மண்ணில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இணையானது என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |