நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோயின் தாக்கம் குறிப்பாக இளம் வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களையே அதிகமாக பாதித்தது. பெரும்பாலும்கொரோனா இரண்டாவது அலையில் குழந்தைகள் அதிகமான அளவில் பாதிக்கப்படவில்லை. இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை.
இதற்கு மத்தியில் கொரோனா மூன்றாவது அலை பரவ இருப்பதாகவும் இது குழந்தைகள் அதிகளவில் பாதிக்கும் என்றும் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பும் எய்ம்ஸ் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இதுபோன்ற தேவையில்லாத வதந்திகளை பரப்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.