விக்ரம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு அவர் பற்றிய சில தகவல்கள்
தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான இவர் லண்டனில் பட்டப்படிப்பு பயின்றுள்ளார். பிரபு நடித்த சந்திரமுகி படப்பிடிப்பின்போது தந்தைக்கு உதவியாக இருப்பதற்காக விக்ரம்பிரபு சென்னை திரும்பியுள்ளார். அதன்பின் சர்வம் திரைப்படத்தில் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தனுக்கு உதவி தயாரிப்பாளராக இவர் பணியாற்றினார். அதன் பின்னர் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் லிங்குசாமியின் தயாரிப்பில் வெளிவந்த கும்கி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்த படத்திற்காக விக்ரம் பிரபு யானைகள் வளர்க்கும் இடத்திற்கு சென்று பயிற்சி எடுத்தார். ஒரே குடும்பத்தில் இருந்து வந்த மூன்றாவது சினிமா வாரிசு என்ற பெருமை விக்ரம் பிரபுவிற்கு உண்டு. கும்கியை தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்காரதுரை, இது என்ன மாயம், வீரசிவாஜி, சத்ரியன் என பல படங்களில் விக்ரம்பிரபு நடித்திருந்தாலும் அவர் கதாநாயகனாக அறிமுகமான படத்தில் தான் சிறந்த அறிமுக நடிகர் என்ற விஜய் விருதை வாங்கியுள்ளார்.