மேற்குவங்க மாநில முதல்வராக 3வது முறையாக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றியைத் தட்டிச் சென்றது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்கத்தின் முதல்வராக பதவியேற்றார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் மம்தா பானர்ஜி பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.