Categories
அரசியல் மாநில செய்திகள்

3விஷயம் சொன்ன ஜெயக்குமார்…! சங்கடத்தில் ஓபிஎஸ்… அதிரும் அதிமுக தலைமை …!!

சசிகலா குறித்து ஓபிஎஸ் பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 3 விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் கொடுத்த பேட்டியை பொறுத்தவரையில்  நான் முழுமையாக கேட்டு விட்டு அதற்குரிய பதிலை நான் சொல்கிறேன். ஒரு 3 விஷயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், பொதுவாகவே தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவருமே ஒன்றுகூடி….

திருமதி சசிகலாவை பொறுத்தவரையில் ஆடியோவில் நிறைய பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள், நிறைய பேர் என்னவென்றால் அமமுக கட்சியோடு, அதில் ஒரு சிலர் பெரிய பொறுப்பில் இல்லாதவர்கள், ஒரு சாதாரண அதிமுக கட்சியில் இருப்பவர்கள் பேசினார்கள்.

உடனே தலைமை கழகத்தினுடைய அந்த கவனத்திற்கு கொண்டு வந்த உடனே அவர்களை நீக்கிவிட்டோம். இனிமேல் யாருமே திருமதி சசிகலா அவர்களை சார்ந்தவர்களிடமோ  கூட எந்தவிதமான ஒரு தொடர்பு வைத்திருக்க கூடாது. அப்படி வைத்துக் கொண்டால் கட்சியை பொறுத்தவரையில் ஒரு ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்று அதை தெளிவுபடுத்தி ஒரு தீர்மானமும் கொண்டு வந்தோம்.

அந்த தீர்மானத்தில் எல்லாரும் தான் கையெழுத்து போட்டார்கள். மாவட்ட செயலாளர்கள் கையெழுத்து போட்டோம், அதேபோல தலைமை நிர்வாகிகள் கையெழுத்து போட்டார்கள், அதே போன்று ஒருங்கிணைப்பாளர் போட்டுள்ளார், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டுள்ளார்.

இரண்டாவது விஷயம் அம்மாவுடைய மறைவிற்குப் பிறகு இபிஎஸ் தலைமையிலான அம்மாவுடைய  அரசு வழி நடத்தும் போது, அப்போது தர்ம யுத்தம் நடத்தி அதன் பிறகு வந்து இணைய வேண்டும் என்ற வகையில் அந்த கருத்தை முன்வைக்கும்போது அப்போ அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் வைத்த கோரிக்கையே….

எந்த காரணத்தை கொண்டும், எந்த காலத்திலும் திருமதி சசிகலாவும் அவர்களைச் சார்ந்தவர்களோடு எந்தவித உறவும், எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் இருந்தால் மட்டுமே நாம் சேர்வோம் அப்படின்னு சொன்னார். அதையும் வந்து இந்த நேரத்தில் சொல்வதற்கு நான் கடமைபட்டுள்ளேன். அதிமுகவுடன் ஒபிஎஸ்சுக்கு உடன்பாடு ஏற்படும் போது சொன்ன விஷயம்,

மூன்றாவது விஷயம் பொதுவாகவே தர்மயுத்தம் நடத்தியதே திருமதி சசிகலாவும், அவர்களை சார்ந்தவர்களையும் எதிர்த்துதான் தர்மயுத்தமே நடந்தது. அம்மாவுடைய மரணத்திற்கு ஒரு நீதி கேட்டு அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் . தர்மயுத்தம் தொடரும் என்று சொல்லிவிட்டு அதன் தொடர்ச்சியாகத்தான் அவர் கூறியிருக்கிறார். இப்போது ஓபிஎஸ் கருத்து கூறியுள்ள நிலையில் அதை நினைவுப்படுத்த வேண்டிய கடமையாக நினைக்கிறேன், ஆனால் என்ன பேசியுள்ளார் என்பதை நான் முழுமையாக கேட்டுவிட்டு விளக்கம் கொடுக்கின்றேன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |