ராணிப்பேட்டையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்துள்ள மையத்திற்கு 3 அடுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில் ராணிப்பேட்டையிலுள்ள நான்கு தொகுதிகளிலும் சுமார் 8,5,698 பொதுமக்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து 4 தொகுதியிலும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சீல் வைத்தனர்.
அதன் பின் அவற்றை துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு ஏந்திரங்கள் அனைத்தும் தொகுதிவாரியாக பிரித்து வைத்தனர். மேலும் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைத்ததோடு மட்டுமல்லாமல் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டது. இப்பணியை சில முக்கிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.