Categories
தேசிய செய்திகள்

“3 அல்லது 6 மாதம் சிறையில் இருந்து வந்தால் தலைவர்கள் ஆகிடலாம்”… பாஜகவினரை தூண்டிவிட்ட அரியானா முதலமைச்சர்..!!!

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகளை தடிகளால் தாக்குங்கள் என்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே தனது கட்சியினருக்கு ஆலோசனை கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் மாநிலமான அரியானாவில் முதல் அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆளும்கட்சியின் விவசாய சங்கத்தினருடன் சேர்ந்து ஆலோசனை நடத்தினர்.

சுமார் 1000 பேர் கூடியிருந்த கூட்டத்தில் பேசிய அவர் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை தாக்க ஆயுதக்குழுக்களை உருவாக்குமாறு கேட்டு கொண்டார். போராடும் விவசாயிகள் மீது தடிகளை கொண்டு தாக்குங்கள்  என்று கூறிய முதலமைச்சர், விளைவுகளை  குறித்து கவலைப்பட வேண்டாம் என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், “அரியானாவில் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆயுதக் குழுக்களை உருவாக்குங்கள்.

சில புதிய குழுக்கள் உருவாகி உள்ளன. அந்தக் குழுக்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். சிறைக்கு போக வேண்டுமே என்று என்னை நீங்கள் கவலைப்படாதீர்கள். சில மாதங்களுக்குப் பிறகு நீங்கள் தலைவர்களாக வெளியே வருவீர்கள். ஆயுதக் குழுக்களை உருவாக்கி பழிக்குப்பழி முறையை பின்பற்றுங்கள்”என்று கூறினார். யாரும் சிறை செல்ல தயங்க வேண்டாம் என்று பாரதிய ஜனதாவினரை தூண்டிவிட்ட முதலமைச்சர் தாக்கிவிட்டு மூன்று அல்லது ஆறு மாதம் சிறையில் இருந்து தலைவர்களாக வெளியே வருவீர்கள் என்று குறிப்பிட்டார்.

போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துபவர்களின் பெயர்கள் வரலாற்றில் பொறிக்கப்படும் என்றும் மனோகர் லால் கட்டர் கூறியுள்ளார். பழிக்குப்பழி முறையில் தாக்குங்கள் என்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே பேசி  இருப்பதற்கு அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |