புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேஸ் மீது இங்கிலாந்தில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தி யுசுவல் சஸ்ஃபெக்ஸ் மற்றும் அமெரிக்கன் பியூட்டி போன்ற திரைப்படங்களுக்காக இரண்டு முறை ஆஸ்கர் விருது பெற்றவர் கெவின் ஸ்பேஸி. கடந்த 2004 முதல் 2012ஆம் ஆண்டு வரை ஓல்ஃபெக் தியேட்டரில் கலை இயக்குநராக பணியாற்றினார். நீ-2 இயக்கம் ஆரம்பித்த சமயத்தில் இருந்தே கெவின் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றது. இதுவரை தன் பாலின ஈர்ப்பாளரான கெவின் ஸ்பேஸி மீது மூன்று ஆண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.