வனப்பேச்சி அம்மனுக்கு ஆண்கள் சிறப்பு பூஜை செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற வனப்பேச்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை வேண்டி ஆண்கள் மட்டும் சிறப்பு பூஜை செய்வது வழக்கம். அதைப்போல் நேற்று காலை 6 மணி அளவில் நடை திறக்கப்பட்டு வனபேச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் பூஜையில் கலந்து கொள்ளும் ஆண்கள் கோவிலிலும் பெண்கள் வீட்டிலும் இரவு முழுவதும் பூஜை செய்து வந்துள்ளனர். இந்த சிறப்பு பூஜையில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்கள் கலந்து கொண்டதால் கோவிலுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.