தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது வரையிலும் 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது.
இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணியாற்றும் பணியாளர்களை இடம் மாற்றவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பணியாளர்களை தவிர்த்து வெளியாட்கள் இருந்தால் கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணியாற்றும் பணியாளர்களை இடம் மாற்றவும் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.