Categories
மாநில செய்திகள்

3-ஆம் வகுப்பு சிறுமியின் கடிதத்தை கண்டு நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்…. பின் எடுத்த அதிரடி முடிவு….!!!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி ஆராதனாவின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நிறைவேற்றி இருக்கிறார். தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,

“வினை தீர்த்த நாடார் பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கூடுதல் கட்டிடம் வேண்டும் என மாணவி என்னிடம் கேட்டிருந்தார். தன் மீது நம்பிக்கை வைத்த மாணவியின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக அந்த பள்ளிக்கு ரூபாய்.35 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |