Categories
உலக செய்திகள்

3 இளைஞர்கள் சேர்ந்து…. சிறுமியை கொடூரமாக தாக்கிய…. அதிர்ச்சி சம்பவம்…!!

இளைஞர்கள் மூவர் சேர்ந்து சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கனடாவிலுள்ள ரொறொன்ரோ என்ற பகுதியில் அமைந்துள்ள Dawes என்ற சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றில் 14 வயது சிறுமி கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 7 மணியளவில் நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இச்சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அச்சிறுமியின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக இளைஞர்கள் மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிறுமி தாக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதனை தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் ஏதேனும் கிடைத்தால் உடனடியாக எங்களிடம் தெரிவிக்கவும் என்று பொதுமக்களிடம் கூறியுள்ளனர்.

Categories

Tech |