பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வராததை கண்டித்து பொதுமக்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் கடந்த 3- வருடங்களுக்கு முன்பு 3 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் கடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு சமூகத்திற்கு விரோதமான செயல்கள் நடைபெறுகிறது. மேலும் அங்கு குப்பைகள், கால்நடைக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் போன்றவை கிடைப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களும் வியாபாரிகளும் இணைந்து அந்தவழியாக வரும் பேருந்துகளை தடுத்து நிறுத்தி ஒரு தாம்பாளத்தில் ஓட்டுனர்களுக்கு வெற்றிலை பாக்கு மற்றும் இனிப்பு வகைகள் கொடுத்துள்ளனர். அதன் பிறகு பேருந்துகளை பேருந்து நிலையத்திற்கு ஒட்டி வருமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாசில்தார் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.