Categories
தேசிய செய்திகள்

3 கல்வியாண்டுகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு…. யுஜிசி அதிரடி அறிவிப்பு….!!!!!

உயர்கல்வி நிறுவனங்கள் இணைய வழிக் கல்வியை பயிற்றுவிப்பதற்காக புதிய நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. அதன்படி இணைய வழிக் கல்வியை மேற்கொள்ளும் உயர்கல்வி நிறுவனங்கள் நாக் மதிப்பீட்டில் 3.26மதிப்பெண் அல்லது தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் 100 இடங்களுக்குள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அங்கீகாரத்தை கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்கீகாரத்தை புதுப்பிக்கும் நடைமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பாதிப்பு காரணமாக இணைய வழிக் கல்விக்கான அங்கீகாரம் பெறுவதில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி இணைய வழிக் கல்விக்கு 2020 -2021 ஆம் கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டு வரை மூன்று கல்வி ஆண்டுகளுக்கான அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |