Categories
மாநில செய்திகள்

3 காவலர்கள் சஸ்பெண்ட்….. போட்டோ எடுத்தது ஒரு குத்தமா…? கீ.வீரமணி கண்டனம்….!!

பெரியார் சிலை முன்பு புகைப்படம் எடுத்த காரணத்திற்காக காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து கி வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி என்று அழைக்கப்படும் தந்தை பெரியார் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அதற்கு முன்பாக காவலர்கள் 3 பேர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக, அவர்கள் 3 பேரையும் காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கு திராவிட கழகத்தின் மூத்த தலைவர் கி வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை முன் நின்று புகைப்படம் எடுப்பது சட்டவிரோதமா? தமிழர்கள் கல்வி பெறவேண்டும், வேலை பெற வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். தமிழகத்தில் நடப்பது அண்ணா பெயரில் உள்ள ஆட்சியா? ராஜாஜி ஆட்சியா? பிஜேபி ஆட்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

Categories

Tech |