Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 கிரிக்கெட்டிலும் அசத்துறாரு….. “2023 ஒரு நாள் உலகக் கோப்பையில் இவர் முக்கியம்”…. விட்றாதீங்க….. முன்னாள் வீரர் கருத்து..!!

2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பேக்கப் துவக்க வீரராக இந்திய அணியில் இவரை வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரேயில் உள்ள  மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க முடியாமல் 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 30.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 192 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்தப் போட்டியில் ஷிகர் தவனுடன் தொடக்க வீரராக களம் இறங்கிய சுப்மன் கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். சுப்மன் கில்  72 பந்துகளில் 82 ரன்கள்  (10 பவுண்டரி, 1 சிக்ஸர்) விளாசிய நிலையில், பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சுப்மன் கில் மிக முக்கியமான வீரராக இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சபா கரிம் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், என்னைப் பொறுத்தவரை சுப்மன் கில்லை வரும் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பேக்கப் துவக்க வீரராக இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும்.ஏன் சொல்கிறேன் என்றால் கில் ஒரு முப்பரிமான வீரராக இருக்கிறார். இவர் மூன்று வகையிலான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக ஆடுகிறார் என்று தெரிவித்தார்.

மேலும் கே.எல் ராகுல் இந்திய அணியில் முதன்மை வீரராக மாறி இருந்தாலும் கூட அவரை நான்காவது இடத்தில் ஆட வைத்துவிட்டு தொடக்க வீரருக்கான இடத்தில் சுப்மன் கில்லை தொடர்ந்து விளையாட வைக்கலாம். ஆனாலும் 2023 உலக கோப்பையில் ஷிகர் தவன் – ரோகித் சர்மா இருவரும் முன்னனி தொடக்க ஆட்டக்காரராக இடம் பெறுவார்கள். அதே நேரத்தில் சுப்மன் கில்லையும் ஒரு பேக்கப் ஓபன் வீரராக அணியில் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை அந்த உலகக் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கட்டாயமாக அவர் முக்கியமான வீரராக மாற வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

 

 

Categories

Tech |