திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மேலும் செண்பகனூர், புலிச்சோலை, பெருமாள் மலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்தை சீரமைக்க கொடைக்கானலில் கூடுதல் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Categories