இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் நாளந்தா என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் ஒரு 15 வயது சிறுவன் ஜாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே நின்று கொண்டு கதறி அழுதுள்ளனர். அவர்களிடம் அந்த சிறுவன் சென்று கேட்டபோது வீட்டிற்குள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறியுள்ளனர். உடனே அந்த சிறுவன் யோசிக்காமல் வீட்டிற்குள் சென்று அங்கிருந்த 2 குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றி விட்டார்.
அப்போது அவருடைய உடம்பில் 85% தீப்பிடித்து விட்டது. இருப்பினும் அதைப் பற்றி கவலைப்படாமல் அந்த சிறுவன் மறுபடியும் வீட்டிற்குள் சென்று மற்றொரு குழந்தையையும் காப்பாற்றி விட்டார். இதனையடுத்து அந்த சிறுவனை அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டார். அந்த சிறுவனின் பெயர் அமித்ராஜ் ஆகும்.