இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கூலி தொழிலாளியான ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 20 வயதுடைய இளம்பெண்ணிடம் ரத்தினகுமார் நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளம்பெண் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது ரத்தினகுமார் அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரத்தினகுமாரை பிடித்து விசாரித்த போது அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதனால் போலீசார் ரத்தினகுமாரை கைது செய்தனர்.