திருவண்ணாமலை சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரசுராமன்(30), அமுதா (27) தம்பதி. இவர்களது மகன்கள் நிலவரசு (5), குறளரசு (4). மகள் யாஷினி (7 மாதம்). நேற்று மதியம் அமுதா தனது பிள்ளைகள் மூன்று பேரையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு தென்பெண்ணை ஆற்றில் குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அதில் 3 குழந்தைகளும் பரிதாபமாக இறந்து விட்டனர். அமுதா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.