மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் காரணம் தெரியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்
கேரள மாநிலத்தில் இருக்கும் மலப்புரத்தை சேர்ந்த தாய் ஒருவர் தனது மூன்று குழந்தைகளை தூக்கில் மாட்டி கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்த போது நான்கு பேரும் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
ஆனால் இதுவரை அது உறுதிப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து காவல்துறையினரின் விசாரணை தொடரும் நிலையில் மூன்று குழந்தைகளையும் கொன்று தாய் தற்கொலை செய்வதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதை போன்று கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் தனது 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.